தாயாரும் பிஞ்சு குழந்தையும் காருடன் கடலில் மூழ்கி பலி: படகில் பயணித்த போது விபரீதம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கென்யாவில் படகில் காருடன் சென்ற இளம் தாயாரும் அவரது பிஞ்சு குழந்தையும் கடலில் தவறி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவில் Likoni நகரில் இருந்து மொம்பாசாவிற்கு செல்ல படகு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் குறித்த படகு பயணத்தின் போது கார் ஒன்று அந்த படகில் இருந்து பின் நோக்கி நகர்ந்து கடலில் தவறி விழுந்து விபத்தில் சிக்கியுள்ளது.

முதலில் அந்த காருக்குள் நான்கு பயணிகள் இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதில் தாயாரும் ஒரு பிஞ்சு குழந்தையும் மட்டுமே இருந்ததாக தெரியவந்துள்ளது.

இதுவரை கடலில் மூழ்கிய அந்த காரை மீட்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் இருள் சூழ்ந்ததால், மீட்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்து நடந்தது தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என படகு சவாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்