நீண்ட 17 ஆண்டுகள் குகைக்குள் வாழ்ந்த நபர்: வெளிவரும் பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் பொலிசாரிடம் இருந்து தப்பி நீண்ட 17 ஆண்டுகள் குகைக்குள் தலைமறைவாக வாழ்ந்த நபரை ஆளில்லா விமானம் மூலம் கண்டறிந்து கைது செய்துள்ளனர்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பெண்கள் மற்றும் சிறார்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தவர் தற்போது 63 வயதாகும் சாங் ஜியாங்.

இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு சிச்சுவான் மாகாண சிறையில் இருந்து தப்பியுள்ளார். இதனையடுத்து தென் சீனாவின் முக்கிய மாகாணங்களுக்கு இவர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தேடும் பணி துரிதமாக நடைபெற்று வந்தது.

ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் பொலிசாரின் முயற்சிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும், பொலிஸ் தரப்பு தேடுவதை மட்டும் நிறுத்தவில்லை.

இந்த நிலையில், யுன்னன் மாகாணத்தின் யோங்ஷான் பகுதி பொலிசார் தலைமறைவான ஜியாங் தொடர்பில் தங்களுக்கு உறுதியான தகவல் கிடைத்துள்ளதாக இந்த மாத துவக்கத்தில் அறிவித்தனர்.

தொடர்ந்து யுன்னன் மாகாணத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையை பொலிசார் துவங்கியுள்ளனர்.

Pic: Yongshan Police

தேடுதல் வேட்டையின் ஒருபகுதியாக ட்ரோன் விமானத்தை பொலிசார் பயன்படுத்தி கண்காணித்தனர்.

அடர்ந்த வனப்பகுதியில் ட்ரோன்களின் உதவியை நாடிய பொலிசாரின் முயற்சிக்கு பலன் கிடைத்தது.

ட்ரோன்களை பயன்படுத்தி தேடுதல் பணியை தொடங்கிய 5 மணி நேரத்தில், ஜியாங் பயன்படுத்தியதாக கூறும் குப்பைக் குவியலை பொலிசார் கண்டறிந்தனர்.

வனப்பகுதியில் அமைந்துள்ள ஒரு குகையில் தலைமறைவாக ஜியாங் வாழ்ந்து வந்ததை செப்டம்பர் 19 ஆம் திகதி கண்டறிந்து, அன்றே கைதும் செய்தனர்.

Pic: Yongshan Police

ஜியாங் தலைமறைவு வாழ்க்கை வாழத் தொடங்கியதும், மனிதர்களுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டுள்ளார்.

ஆற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்தி வந்த ஜியாங், காட்டு விறகுகளை சேகரித்து உணவு சமைக்க பயன்படுத்தியுள்ளார்.

யுன்னன் மாகாண பொலிசாரால் நீண்ட 17 ஆண்டுகளுக்கு பின்னர் கைதாகியுள்ள ஜியாங், தற்போது மீண்டும் சிறைக்கு செல்ல உள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்