கர்ப்பிணி மனைவி.. குழந்தைகளை.. துடி துடிக்க கொன்று ரசித்த தந்தை: ரகசியமாக அளித்த வாக்குமூலம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

அமெரிக்காவில் கர்ப்பிணி மனைவி. இரண்டு குழந்தைகளை கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர், ஓர் ஆண்டிற்கு பிறகு கடிதம் மூலம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

Colorado, Frederick பகுதியை சேர்ந்த 34 வயதான Chris Watts என்ற நபரே இக்கொடூர கொலைகளை செய்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Frederick பகுதியில் உள்ள Watts வீட்டில் கர்ப்பிணி மனைவி Shanann, மகள்கள் Bella (4), Celeste(3) ஆகியோரை கொல்லப்பட்டு கிடந்தனர்.

கொலை குற்றச்சாட்டு தொடர்பில் சிறையில் உள்ள Watts, Cheryln Cadle என்ற அந்நியருக்கு எழுதிய கடிதத்தில், Nichol Kessinger என்ற பெண்ணுடன் புதிய வாழ்க்கையை தொடங்கவே இவ்வாறு மூன்று பேரையும் கொன்றேன்.

2018 ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி காலையில், மகள்களின் அறைக்கு சென்ற தலையணையால் கொல்ல முயன்றேன். ஆனால், அது தோல்வியடைந்தது. பின்னர், மனைவி அறைக்கு சென்று, அவரை கொன்றேன்.

அவரால் என்னுடன் போராட முடியவில்லை, என்னை பார்த்துக்கொண்டே இறந்தார். ஓடி வந்த மகள்கள் மனைவியின் உடலை கட்டிப் பிடித்துக்கொண்டனர். அவர்களை அங்கிருந்த தொலை தூரத்தில் உள்ள நிலத்திற்கு இழுத்துச்சென்று கொன்றேன்.

Dailymail

அந்த நிலத்திலேயே மூன்று பேரையும் அடக்கம் செய்தேன் என எழுதியுள்ளார். மூன்று பேரில் மகள் Bella தான் என்னுடன் கடுமையாக போராடினால். அப்பா என்னை விட்டுவிடுங்கள்... என அவள் கத்தியது வாழ்நாள் முழுவதும் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

அவளுக்கு நான் என் செய்ய போகிறேன் என நன்றாக தெரிந்தது என கடித்தின் மூலம் ரகசியமாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கடிதத்தை புத்தகத்தில் வெளியிட Cheryln Cadle-க்கு Watts அனுமதியளித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்