கடலுக்குள் இருந்து வடகொரியா ஏவிய ரகசிய ஏவுகணை: அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கடலுக்குள் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ரக ரகசிய ஏவுகணை ஒன்றின் சோதனை முயற்சி வெற்றிகரமாக நடந்தேறியதாக வடகொரிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த புது ரக ஏவுகணையானது செங்குத்தாக ஏவி புதிய முயற்சியில் வடகொரியா வெற்றி கண்டுள்ளது.

ஆனால் இந்த சோதனை வேளையில் வழக்கமாக பங்கேற்கும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சில முக்கிய காரணங்களால் கலந்துகொள்ளவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இருப்பினும் குறித்த சோதனையை வெற்றிகரமாக முடித்த நிபுணர்களுக்கு தமது வாழ்த்துகளை கிம் தெரிவித்துள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த வார இறுதியில் அமெரிக்க அதிகாரிகளுடன் ஆணுஆயுத பேச்சுவார்த்தைகளுக்கு வடகொரியா தயாராகி வரும் நிலையில், இந்த புதியரக ஏவுகணை சோதனையானது முக்கியத்துவம் பெறுகிறது.

ஜப்பான் அருகாமையில் வடகொரியா ஒரு நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனையை மேற்கொண்டதாக தென் கொரியா முன்னரே தகவல் வெளியிட்டிருந்தது.

ஆனால் தங்கள் நாட்டின் இந்த சோதனை முயற்சியானது எந்த அண்டை நாட்டையும் பாதிக்கும் வகையில் அமையவில்லை என வடகொரியா அதற்கு பதில் அளித்திருந்தது.

இது ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தடைகளை மீறும் செயல் என ஜப்பான் பிரதமர் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

மேலும், இந்த சோதனையால் ஏதேனும் உடனடி பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டனவா என்பது தொடர்பில் தகவல் இல்லை என தெரியவந்துள்ளது.

புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையானது தங்கள் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவே என வடகொரிய அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி ஒரு நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அனுமதியை பெற வேண்டுமா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.

இந்த ஏவுகணையானது ஏவும் தளத்தில் இருந்து சுமார் 1,300 கிலோ மீற்றர் தொலைவு வரை பயணப்படும் சக்தி வாய்ந்தது என தென் கொரிய நிபுணர்கள் குழு கணித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்