கடுமையான வயிற்று வலியால் துடித்த நபர்... சோதனையில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஸ்பெயின் நாட்டில் வயிற்று வலியால் துடித்த நபரை மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்த போது இரும்பு கம்பி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிலையி, அதற்கு அந்த இளைஞன் சொன்ன காரணத்தை கேட்டு மருத்துவர்கள் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் சாம்சன். 19 வயதான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக மருத்துவரை சந்தித்துள்ளார்.

அப்போது இரும்புச் சத்துக் குறைபாடும் மற்றும் ரத்தச் சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை குறைபாடு இருப்பதாக மருத்துவர் கூறியுள்ளார்.

இதற்காக அவர் சில மாத்திரைகளை கூறியுள்ளார்.

ஆனால் சாம்சனோ, மருத்துவர் கூறிய அறிவுரைகளை கேட்காமல். இரும்புச் சத்திற்கு இரும்பு கம்பியை விழுங்கியுள்ளார்.

இதனால் கடுமையான் வயிற்று வலி ஏற்பட, மருத்துவமனை சோதனையில் இரும்பு கம்பி இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இணையத்தில், வெறி தனமாக இருந்த சாம்சன், தனக்கு ஏற்படும் குறைபாடுகளுக்கு இணையதளம் வாயிலாகவே தீர்வை தேடி வந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் தனக்கு அளவு கடந்த ஆற்றல் வேண்டும் என உடலுக்கு சார்ஜ் போடும் வகையில் பேட்டரியையும் கண்டுபிடிக்கப் போவதாகக் கூறியிருக்கிறார் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்