தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் முன் 12ஆவது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட தலை!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் சிலர், 12ஆவது மாடியிலிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து, தங்கள் முன் தூக்கியெறியப்பட்ட தலையைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

பின்னர் அந்த தலை Elizaveta (19) என்ற இளம்பெண்ணுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.

Elizaveta, ரஷ்யாவிலுள்ள ஆபாச நடன கிளப் ஒன்றில் வேலை செய்துவந்தார். தங்கள் முன் இரத்தம் தோய்ந்த உடைகள் வந்து விழுவதைக் கண்டு அதிர்ந்துபோயிருந்த அந்த சிறுவர்கள், அதைத் தொடர்ந்து ஒரு பெண்ணின் தலையும், உடல் பாகங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வந்து விழுவதைக் கண்டு நடுங்கிப்போயிருக்கின்றனர்.

பின்னர் Elizavetaவை கொலை செய்ததாக சந்தேகத்தின்பேரில் 38 வயதுடைய ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர் Elizavetaவின் காதலராக இருக்கலாம் என கருதப்படுகிறது. எதற்காக Elizaveta கொலை செய்யப்பட்டார் என பொலிசார் விசாரித்துவருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்