எட்டு மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள மாளிகை: மலேசிய மன்னரின் மொடல் மனைவி கேட்கும் ஜீவனாம்சம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

மலேசிய முன்னாள் மன்னரின் முன்னாள் மொடல் மனைவி, அவரிடமிருந்து எட்டு மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள மாளிகை, மற்றும் மாதம் ஒன்றிற்கு 24,000 பவுண்டுகள் ஆகியவற்றை ஜீவனாம்சமாக கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொடல் அழகியை மலேசியாவின் முன்னாள் மன்னர் ஐந்தாம் முகமது திருமணம் செய்தாலும் செய்தார், இன்றுவரை அவருக்கு பிரச்னை தீர்ந்த பாடில்லை முதலாவது மொடல் மனைவியுடன் இன்பமாக வாழலாம் என்ற ஆசையால் அவரது மன்னர் பதவிபோனது.

பின்னர் குடும்பத்தாரின் எதிர்ப்பால், மனைவியையும் பிரியவேண்டியதாயிற்று.

பதவியும் போய், அழகான மொடல் மனைவியுடன் வாழலாம் என்ற ஆசையிலும் மண் விழுந்தது போதாதென்று, இப்போது இன்னொரு அடி கிடைத்திருக்கிறது மன்னருக்கு. ஆம், மன்னரின் முன்னாள் மனைவி Oksana Voevodina (27) அவரிடம் ஜீவனாம்சம் கோரியிருக்கிறார்.

அதுவும் கொஞ்ச நஞ்சம் அல்ல! ஏற்கனவே ரஷ்யாவில் ஒரு வீட்டை ஏற்கனவே கேட்டுள்ள நிலையில், தற்போது லண்டனிலுள்ள எட்டு மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள மாளிகை ஒன்றையும் Oksana மன்னரிடம் கேட்டிருக்கிறாராம்.

அத்துடன் தனது மகனின் செலவுகளுக்காக மாதம் ஒன்றிற்கு 24,000 பவுண்டுகளையும் அவர் கேட்டிருக்கிறாராம்.

Oksana இவ்வளவு மதிப்புடைய விடயங்களை கேட்டுள்ளதையடுத்து, நான் என்ன பில் கேட்ஸா என்று மன்னர் கோபத்துடன் கேட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்