நீதிமன்றத்தில் நாஜி வணக்கம் செலுத்திய மசூதி துப்பாக்கிதாரி!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

நோர்வே மசூதியில் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திய குற்றவாளி இன்று நீதிமன்றத்தின் நடுவே நாஜி வணக்கம் செலுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நோர்வேயை சேர்ந்த 22 வயதான பிலிப் மன்ஷாஸ் என்கிற இளைஞர் கடந்த ஆகஸ்டு 10ம் திகதியன்று மசூதியில் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார்.

இதில் 65 வயதான நபர் மட்டும் பலத்த காயமடைந்திருந்தார். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், பிலிப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அவருடைய வீட்டிற்கு சென்ற போது, பிலிப்பின் வளர்ப்பு சகோதரியான ஜோஹன்னே ஜாங்ஜியா தலையில் மூன்று குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

ஜோஹன்னே குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பிலிப் தந்தையின் காதலியால் அவர் தத்தெடுக்கப்பட்டதும், ஆசிய இனத்தை சேர்ந்தவர் என்பதால் பிலிப் அவரை சுட்டுக்கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

இந்த குற்றசாட்டுக்களை ஒப்புக்கொண்ட பிலிப், தன் மீதான 'பயங்கரவாத செயல்' மற்றும் 'கொலை' சந்தேகங்களை நிராகரித்தார்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிலிப் ஊடகங்களை நோக்கி நாஜி வணக்கம் செலுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்