மகளுக்கு பிறந்தநாள் பரிசாக தந்தையின் கொடுஞ்செயல்: மனைவியின் துணிச்சல் முடிவு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பொலிவியா நாட்டில் மகளின் பிறந்தநாளுக்கு பரிசு வாங்க பணம் இல்லை எனக் கூறி தந்தை ஒருவர் சொந்த மகளை சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொலிவியாவில் உள்ள சிபாயா நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெயர் குறிப்பிடப்படாத அந்த 32 வயது நபர் தமது மனைவி குடியிருப்பில் இருந்து வெளியேறும் மட்டும் சம்பவத்தன்று காத்திருந்துள்ளார்.

மட்டுமின்றி தமது மனைவியிடம், 13-வது பிறந்தநாள் கொண்டாடும் மகளுடன் தனியாக கொஞ்ச நேரம் செலவிட வேண்டும் எனவும் கூறி வந்துள்ளார்.

ஆனால் அவர் தமது சொந்த மகளை சீரழிப்பார் என தாம் கருதவில்லை என சிறுமியின் தாயார் கண்கலங்கியுள்ளார்.

இந்த விவகாரம் சிறுமியின் தாயாருக்கு தெரியவந்ததும், அந்த நபர் தமது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இருப்பினும் அவர் இதை பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனால் கடந்த 4-ஆம் திகதி அந்த தந்தை பொலிசாரால் கைதாகியுள்ளார்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், தமது மகளுக்கு பிறந்தநாள் பரிசு வாங்கித் தர தமக்கு எந்த வசதியும் இல்லை எனவும், அதனாலையே தமது 13 வயது மகளுடன் உறவு வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த சிறுமிக்கு உளவியல் ஆலோசனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்