அமெரிக்க படை நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தளபதி பலி!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

அமெரிக்க-ஆப்கானிஸ்தான் படையினரின் கூட்டு தாக்குதலில் அல்-கொய்தாவின் உயர்மட்ட தளபதி அசிம் உமர் கொல்லப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அல்கொய்தா தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்கும் விதமாக கடந்த சில காலமாகவே ஆப்கானிஸ்தானுடன் அமெரிக்க கூட்டுப்படை இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செப்டம்பர் 23ம் திகதியன்று ஹெல்மண்ட் மாகாணத்தில் மூசா காலா மாவட்டத்தில் ஒரு தலிபான் மறைவிடத்தை குறிவைத்து, அமெரிக்க கூட்டுப்படை தாக்குதல் நடத்தியது.

இந்த சம்பவத்தின் போது திருமண விருந்தில் கலந்து கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள் 40 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஹெல்மண்டின் துணை மாகாண கவுன்சிலன் அப்துல் மஜீத் அகுண்ட் தெரிவித்திருந்தார்.

மேலும், மாகாணத்தின் தலைநகரான லஷ்கர் காவில் 12 பொதுமக்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்க கூட்டுப்படை நடத்திய தாக்குதலில் அசிம் உமர் தனது சக பயங்கரவாதிகள் 6 பேருடன் கொல்லப்பட்டார் என்று ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்காசியாவின் நடவடிக்கைகளின் தலைவராக இருந்த உமர், அல்கொய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரிக்கு பயண ஏற்பாடுகளை செய்து வந்தவர்.

முன்னதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், 18 ஆண்டுகால யுத்தத்தில் தலிபான் மற்றும் பிற கிளர்ச்சியாளர்களால் ஏற்பட்ட பொதுமக்கள் இறப்பை விட, நடப்பாண்டில் அமெரிக்க மற்றும் ஆப்கானிய படைகளால் ஏற்பட்ட இறப்புகள் அதிகம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்