வாக்குறுதியை நிறைவேற்றாத மேயர்... லொறியில் கட்டி வீதிகளில் இழுத்து சென்ற கிராம மக்கள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மெக்சிகோவில் சாலையை சரி செய்யாத மேயரை ஆத்திரமடைந்த கிராமவாசிகள் லொறியில் கட்டி வீதிகளில் இழுத்து சென்றுள்ளனர்.

மெக்சிகோவில் சியாபாஸ் மாநிலத்தில் லாஸ் மார்கரிட்டாஸின் மேயரான ஜார்ஜ் லூயிஸ் எஸ்காண்டன் ஹெர்னாண்டஸ் தனது அலுவலகத்திலிருந்து மர்ம கும்பல் ஒன்றால் தூக்கி செல்லப்பட்டார்.

பின்னர் லொறி ஒன்றின் பின் பக்கம் கயிற்றால் கட்டப்பட்டு வீதிகளில் இழுத்து செல்லப்பட்டுள்ளார். அவரை சுற்றிலும் கிராம வாசிகள் கையில் கட்டை மற்றும் குச்சிகளுடன் ஆரவாரம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்து விரைந்த 40 பொலிஸார், லொறியை தடுத்து நிறுத்தி மேயரை மீட்டுள்ளனர். இதில் மேயர் உட்பட 20 பேர் காயமடைந்ததாகவும், 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், செவ்வாய்க்கிழமையன்று சாலை சரியாக இல்லை என்றும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் கிராம வாசிகள் புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால் அதற்கு சரியாக பதில் கிடைக்காததால் ஆத்திரத்தில் அலுவலகத்தை சூறையாடி மேயரை தூக்கி சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

சிகிச்சைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் 8 மணி நேரம் பேசினார். அதில் இந்த சம்பவத்தால் தான் பயந்துவிடவில்லை என்றும், நான்கு மாதத்திற்கு முன்பு நடந்த ஒரு தனிப்பட்ட சம்பவத்திற்காக கும்பல் தாக்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers