திருமண ஊர்வலத்தில் மணப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு முத்தம் கொடுத்த முன்னாள் காதலன்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கொலம்பியா நாட்டில் திருமண ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த காதலியை நிறுத்தி, அவருடைய முன்னாள் காதலன் மன்னிப்பு கேட்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கொலம்பியா நாட்டின் அந்தியோக்வியாவில் உள்ள மெடலின் நகரில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ காட்சியில், திருமணத்திற்கு ஆயத்தமான மணப்பெண், வாகனத்தில் உறவினர்கள் புடைசூழ மகிழ்ச்சியுடன் சென்றுகொண்டிருக்கிறார்.

அப்போது கருப்புநிறத்திலான ஆடையில் ஊதா ஹெல்மட் அணிந்த நபர், காருக்கு அருகே வேகமாக நடந்து சென்று மணப்பெண்ணிடன் பேசுகிறார்.

உடனே கார் நிறுத்தப்பட்டு இருவருக்கும் இடையே காரசாரமாக வாக்குவாதம் நடைபெறுகிறது. மணப்பெண் தன்னுடைய முகத்தில் கைவைத்துக்கொண்டு பேசுகிறார். அந்த இளைஞர் மன்னித்து விடுமாறு நீண்ட நேரம் கெஞ்சிய சயமத்தில், சுற்றிலும் நின்று கொண்டிருந்த பாதசாரிகள் முத்தமிடுமாறு கூச்சலிடுகின்றனர்.

அதனை கேட்டு அந்த இளைஞரும் முத்தம் கொடுக்க, மணப்பெண் வேகமாக தள்ளிவிடுவதை போல வீடியோ அமைந்துள்ளது.

இந்த சம்பவத்தில் இறுதியாக அந்த மணப்பெண் முன்னாள் காதலனை அதே இடத்தில் விட்டு சென்று, திருமணம் செய்துகொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ கட்சியானது இணையத்தில் வைரலானதை அடுத்து, கடைசி நேரத்தில் சமாதானம் பேச முயன்ற முன்னாள் காதலனை இணையதளவாசிகள் திட்டி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்