கர்ப்பமாக இருந்த ஓரங்குட்டானுக்கு மனிதனால் ஏற்பட்ட கொடுமை.... கலங்க வைக்கும் புகைப்படம்

Report Print Abisha in ஏனைய நாடுகள்

காட்டை அழிக்கும் பணியில் கர்ப்பமாக இருந்த ஓரங்குட்டான் கொலை செய்யப்பட்ட புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் புதிய நிறுவனங்கள் துவங்க காடு ஒன்று அழிக்கப்பட்டு வருகின்றது. இதனால், அங்குள்ள வனவிலங்குகள் வாழ்விடமற்று தவித்து வருகின்றன. அந்தக் காட்டில் எஞ்சியிருக்கும் மரம் ஒன்றில் ஒரங்குட்டான் என்ற ஒருவகை குரங்கு அமர்ந்திருக்கிறது. கர்ப்பமாகயிருக்கும் அந்தக் குரங்கின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் தனது அப்பாவி முகத்துடன் என்ன விட்டுவிடுங்கள் என்பது போன்று அந்த ஓரன்குட்டான் அமர்ந்துள்ளது.

image: indiatimes

இந்நிலையில், அதை அகற்ற முடியாத நிலையில், துப்பாக்கியால் அதை நோக்கி ஒருவர் சுட்டுள்ளார். இதில் ஓரங்குட்டான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

அந்தக் கர்ப்பமான ஓரங்குட்டான் குரங்கின் பெயர் பூன்-மீ. அது மிகவும் பலவீனமானதாக இருந்துள்ளது. அது ஒட்டிக்கொண்டிருந்த மரத்தைவிட்டு வெளியேற பயந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த புகைப்படம் பலருக்கும் வலியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், காட்டை அழிக்க புல்டோசர்கள் பயன்படுத்திய அந்த மிரட்சியில் பயந்துபோய் அது காணப்பட்டு, உணவு தண்ணீர் என்று எதையும் தேடாமல் ஓரே இடத்தில் இருந்துள்ளது என்று அங்கு சென்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

image: indiatimes

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்