கழிவறைக்குள் அமர்ந்து மாணவர்களை உணவு சாப்பிட வற்புறுத்திய ஆசிரியைகள்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மெதுவாக உணவு சாப்பிட்ட மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள், துர்நாற்றம் வீசும் கழிவறைக்குள் அமரவைத்து சாப்பிடுமாறு வற்புறுத்தியுள்ளார்.

சீனாவில் உள்ள மழலையர் பள்ளி ஒன்றில் படித்து வரும் மாணவி கடந்த சில தினங்களுக்கு முன் தொண்டை எரிச்சலால் அவதிப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர், சூடான உணவை அவசரமாக சிறுமி சாப்பிட்டதால் புண் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

இரண்டு வாரங்களாகியும் சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அதுபற்றி விசாரித்த போது அதிர்ச்சி தரும் தகவல் பெற்றோருக்கு கிடைத்துள்ளது.

சிறுமி உள்ளிட்ட சில மாணவர்கள் மெதுவாக உணவு சாப்பிடும் பழக்கத்துடன் இருந்ததால், கழிவறையில் அமரவைத்து கட்டாயப்படுத்தி வேகமாக உணவு சாப்பிட ஆசிரியர்கள் வற்புறுத்தியுள்ளனர்.

இதுபோன்று அடிக்கடி மாணவர்களுக்கு தண்டனை கொடுத்து வந்துள்ளனர். அங்கிருந்த துர்நாற்றம் தாங்க முடியாமல் சிறார்களும் வேகமாக சூடான உணவை சாப்பிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறார்களின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்ததை பள்ளி நிர்வாகமும் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்