60 ஆண்டுகளில் இல்லாத கனமழை... 225 கி.மீ. வேகத்தில் புயல்: உருக்குலைந்த ஜப்பான்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஜப்பானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள கடுமையான மழை மற்றும் புயலால் இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டதோடு, ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் டாக்லாக் மொழியில் "வேகம்" என்று பொருள்படும் ஹகிபிஸ் என்கிற புயலானது சனிக்கிழமை மாலை ஜப்பானின் பிரதான தீவான ஹொன்ஷூவில் நிலச்சரிவை ஏற்படுத்தியது.

இது கிழக்கு கடற்கரையை நோக்கி மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஜப்பானின் வானிலை நிறுவனம், முன்பை விட இல்லாத அளவிற்கு மழை பெய்தால் மிக உயர்ந்த பேரழிவு ஏற்படும் என எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. கியோடோ செய்தியின்படி, குறைந்தது 80 பேர் காயமடைந்துள்ளனர். அதே நேரத்தில் சூறாவளியின் விளைவாக 370,000 க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் தடை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

அதோடு அல்லாமல் இரண்டு ஆண்கள் பலியாகியிருப்பதாகவும், 9 பேர் மாயமாகியிருப்பதாகவும் செய்தி வெளியாகியிருக்கிறது.

சுமார் 17,000 பொலிஸ் மற்றும் இராணுவ துருப்புக்கள் வரவழைக்கப்பட்டு, மீட்பு நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்கின்றனர்.

புயல் காரணமாக இரண்டு ரக்பி உலக்கோப்பை ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையே நடக்கவிருந்த உலகக்கோப்பை ஆட்டங்கள் சமன் என அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டன. ஃபார்முலா 1 கார் பந்தயமும் ரத்து செய்யப்பட்டது.

முன்னதாக 1959ல் மணிக்கு 306 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய வெரா புயலுக்குப் பின் ஜப்பான் எதிர்கொள்ளும் கடுமையான புயலாக இது கருதப்படுகிறது. இந்த வெரா புயலால் சுமார் 5000 பேருக்கு மேற்பட்டோர் காணாமல் போயினர் அல்லது இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்