சிறைகளில் இருந்து தப்பிய 1000 ஐஎஸ் பயங்கரவாதிகள்: அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இந்த வார இறுதியில் இஸ்லாமிய அரசுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் வடக்கு சிரியாவில் உள்ள ஒரு முகாமில் இருந்து தப்பிவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வடக்கு சிரியாவில் துருக்கிய துருப்புக்கள் குர்திஷ் தலைமையிலான படைகளுக்கு எதிராக வான் மற்றும் தரை தாக்குதலை தீவிரப்படுத்தியதால் அவர்களுடைய குடும்பங்கள் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த தொடர் தாக்குதலால், 950 ஐஎஸ் அமைப்பின் குடும்ப உறுப்பினர்கள் அய்ன் இசா முகாமில் இருந்து தப்பிச் சென்றதோடு, நவ்குர் சிறைச்சாலையிலிருந்து வெளியேறியிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

அவர்களுடன் சேர்ந்து ஐஎஸ் பயங்கரவாதிகளை இருமுறை திருமணம் செய்துகொண்டவரும், பிரித்தானியாவை சேர்ந்தவருமான டூபா கோண்டல் (25) தப்பியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அவர் தான் பிரித்தானிய மாணவி ஷமிமா பேகத்தை மூளைச்சலவை செய்ததாக நம்பப்படுகிறது. பெயரிடப்படாத மூன்று பிரித்தானிய ஐ.எஸ் பெண்கள் தப்பித்ததாக கருதப்படுகிறது. ஆனால் பேகம் இருக்கும் இடம் குறித்து தெரியவில்லை.

ஐஎஸ் அமைப்பால் ஏற்கனவே பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருந்து வரும் நிலையில், தற்போது பிரித்தானிய மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் பதட்டங்கள் அதிகரித்துள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்