நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்.. விமானி எடுத்த முடிவு: திகலூட்டும் வீடியோ

Report Print Basu in ஏனைய நாடுகள்

அமெரிக்காவில் இருந்து சீனா புறப்பட்ட விமானத்தின் இயந்திரம் நடுவானில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் 17ம் திகதி நிகழ்ந்துள்ளது. அமெரிக்கா, வாஷிங்டனின் Dulles விமான நிலையத்தில் இருந்து சீனாவில் பீஜிங் பயணித்த ஏர் சீனா விமான நிறுவனத்திற்கு சொந்தமான 818 விமானத்திலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மாலை 4.39 மணிக்கு புறப்பட்ட குறித்த விமானத்தில் சுமார் 396 பயணிகள் பயணித்துள்ளனர். விமானத்தில் இயந்திரம் தீப்பற்றி எரிந்ததை விமானநிலையத்தில் இருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, பயங்கர சத்தம் கேட்டது, விமானத்தை பார்த்த போது அதன் இடது இயந்திரத்தில் இருந்து தீப்பிழம்புகள் வந்துக் கொண்டிருந்தது, உடனே எனது போனை எடுத்து வீடியோ எடுத்தேன் என கூறினார்.

விமானத்தில் அவசரநிலை ஏற்பட்டதால் விமானிக்கு நடுவானில் எரிபொருளை திறந்து விட வேண்டி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மாலை 5.54 மணிக்கு Dulles விமான நிலையத்திலே விமானம தரையிறக்கப்பட்டது.

இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், விமானம் பத்திரமா தரையிறக்கப்பட்டதாக விமான போக்குவரத்து நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விமான இயந்திரத்தில் பறவைகள் சிக்கியதால் இயந்திரத்தில் தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், சம்பவம் குறித்து ஏர் சீனா விமான நிறுவனம் தரப்பில் இருந்து தற்போது வரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்