உலகளவில் அதிக மக்கள் பட்டினியாலும், பசியாலும் வாடும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் உலக மக்களின் பசியைக் குறைத்து முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், மக்களின் உணவுப் பற்றாக்குறையை மதிப்பிடுவதற்காகவும் உலகளாவிய பட்டினி மதிப்பீடு என்ற பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.
அதே போல இது தொடர்பான பட்டியல் இந்தாண்டும் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வானது 117 நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி இந்த பட்டியலில் முதலிடத்தில் உருகுவே உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் உக்ரைன், துருக்கி உள்ளன.
தெற்கு ஆசியாவைப் பொறுத்தவரை அதிகம் பசியால் வாடும் மக்கள் கொண்ட நாடுகளில், இந்தியா மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இலங்கை 66-வது இடத்திலும் வங்கதேசம் 88-வது இடத்திலும், பாகிஸ்தான் 94-வது இடத்திலும் உள்ளது.
இந்தியா 102-வது இடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேறு முக்கிய நாடுகள் என எடுத்து கொண்டால் ரஷ்யா 22வது இடத்திலும், சீனா 25வது இடத்திலும் உள்ளன.