சிரியாவில் தொடர் ராணுவ தாக்குதல்.. 70 ஆயிரம் குழந்தைகள் வெளியேற்றம்! வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்
59Shares

சிரியாவில் துருக்கி ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ராணுவம் வெளியேறிய பின்னர், சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போராடிய குர்திஷ் இனப் போராளிகள் மீது, துருக்கி ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.

சிரியாவின் வடக்கு பகுதியில் நடத்தப்பட்டு வரும் தாக்குதலில், லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு குர்திஷ் போராளிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

துருக்கி ராணுவத்திற்கு அஞ்சி இதுவரை வடக்கு சிரியாவில் இருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளனர். அவர்களின் 70 ஆயிரம் குழந்தைகள் வீடுகளை இழந்து அகதிகளாக வெளியேறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படும் மனிதத்தன்மையற்ற தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்