வெள்ளைக் குதிரையில் ஒய்யாரமாக வலம் வரும் கிம் ஜாங் உன்: வெளிவரும் பின்னணி தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வடகொரிய மக்களால் புனிதமான சிகரம் என கருதப்படும் Paektu-வில் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் வெள்ளைக் குதிரை மீது ஒய்யாரமாக வலம் வரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Paektu சிகரத்தில் சென்றுள்ளதால் கிம் ஜாங் உன் அடுத்த சில தினங்களில் முக்கியமான கொள்கை முடிவு ஒன்றை வெளியிட இருக்கிறார் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வடகொரியாவின் உத்தியோகபூர்வ செய்தி ஊடகமான KCNA அந்த புகைப்படங்களை வெளியிட்டு, கூடவே தகுந்த தலைப்புகளையும் குறிப்பிட்டுள்ளது.

நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் முக்கிய முடிவு ஒன்றை கிம் ஜாங் உன் எடுக்கவிருக்கிறார் என அதில் ஒரு புகைப்படத்தில் சூசகமாக தெரிவித்துள்ளனர்.

வடகொரியாவை உலக நாடுகளில் முன்னிலைப்படுத்தும் முக்கிய நகர்வுக்கு கிம் ஜாங் உன் எடுக்கப்போகும் கொள்கை முடிவு சான்றாக அமையும் எனவும் அந்த செய்தி முகமை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் நீண்ட நாட்களுக்கு பின்னர் Paektu சிகரத்தில் கிம் ஜாங் உன் சென்றிருப்பது நாட்டின் புதிய கொள்கை முடிவை அறிவிப்பதற்கான குறியீட்டாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் மத்தியில் இருந்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் எப்போதெல்லாம் Paektu சிகரத்தில் கிம் ஜாங் உன் சென்றாரோ, அதற்கு பின்னர் வடகொரியாவில் முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் Paektu சிகரத்தில் கிம் ஜாங் உன் சென்றிருந்தார்.

அதன் அடுத்த சில மாதங்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புடன் முதன் முறையாக சந்திப்பு நிகழ்ந்தது.

கிம் ஜாங் உன் மட்டுமல்ல, வடகொரியாவின் முக்கிய தலைவர்களாக கருதப்படும் கிம்மின் தந்தை மற்றும் தாத்தா ஆகியோரும் Paektu சிகரத்தில் சென்று வந்த பின்னர் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர்.

சமீப ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொருளாதார தடையில் சிக்கி வடகொரியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்க மற்றும் வடகொரிய அதிகாரிகள் இடையே ஸ்வீடன் நாட்டில் தற்போது ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருப்பினும் அமெரிக்கா இன்னும் தனது ஆதிக்க மன நிலையில் இருந்து வெளிவர மறுப்பதாக வடகொரியா குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்