தாக்குதலை நிறுத்தப்போவதில்லை.. தடை குறித்து கவலை இல்லை! துருக்கி ஜனாதிபதி திட்டவட்டம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

அமெரிக்காவின் பொருளாதார தடை குறித்து கவலை இல்லை என்றும், குர்துக்களுக்கு எதிரான சண்டையை நிறுத்தப்போவதில்லை என்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.

துருக்கியின் ராணுவப் படைகள் சிரியாவில் உள்ள குர்திஷ் இனப்போராளிகள் மீது கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, சிரியாவில் மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்டால், துருக்கி மிகவும் மோசமான பொருளாதார கோபத்தை அனுபவிக்கக்கூடும் என்றும், அந்நாட்டின் பொருளாதாரத்தை நான் முற்றிலும் அழிப்பேன் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் துருக்கி நாட்டின் ஜனாதிபதி எர்டோகன், சிரியாவில் நடத்தப்படும் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘அமெரிக்காவின் பொருளாதார தடை குறித்து கவலை இல்லை. குர்துக்களுக்கு ஆதரவாக சண்டையிடுவதற்காக சிரியா அரசுப்படைகள், மன்பிஜ் நகர் வந்து சேர்ந்திருப்பதால் எங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை.

மன்பிஜ் சிரியாவுக்கு சொந்தமான நிலம் தானே. தெளிவாக இலக்கை நிர்ணயித்துவிட்டோம். எல்லையில் உள்ள தீவிரவாதிகளை ஒழிக்காமல் விடப்போவதில்லை. அதுவரை குர்துக்களுக்கு எதிரான சண்டையை நிறுத்துவதற்கு சாத்தியமே இல்லை’ என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

REUTERS

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்