44 பிள்ளைகளின் தாயார் முதன் முறையாக எடுத்த முக்கிய முடிவு: என்ன தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
871Shares

உலகின் அதிக பிள்ளைகள் கொண்ட இளம் தாயார் என அறியப்படும் Mariam Nabatanzi தமது வாழ்க்கையில் முதன் முறையாக முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உகாண்டா நாட்டவரான 40 வயது Mariam Nabatanzi இனிமேல் தாம் பிள்ளை பெற்றுக்கொள்ள போவதில்லை என முடிவெடுத்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தமது கணவர் பிரிந்து சென்ற பின்னர், தமது 44 பிள்ளைகளை பராமரிக்க தாம் மிகவும் அல்லல்படுவதாக கூறும் அவர்,

மருத்துவர்களை நாடி தமது முடிவை அறிவித்துள்ளதாகவும், உரிய சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது 12-வது வயதில் தம்மைவிட 28 வயது அதிகமானவரை திருமணம் செய்து கொண்ட மரியத்திற்கு, திருமணம் முடிந்த அடுத்த ஆண்டே இரட்டை பிள்ளைகள் பிறந்துள்ளது.

(Image: REUTERS)

தொடர்ந்து தமது 36-வது வயது வரை 44 பிள்ளைகளுக்கு தாயாரான மரியத்திற்கு தற்போது பிழைப்புக்கு வேறு வழி தெரியவில்லை என கூறப்படுகிறது.

தமது 23-வது வயதில் 25 பிள்ளைகளுக்கு தாயாரான மரியம், அப்போதே மருத்துவர்களிடம் தமது பொருளாதார நிலையை எடுத்துக் கூறி கருத்தடை செய்து கொள்ள கெஞ்சியுள்ளார்.

ஆனால் இவரது உடலமைப்புக்கு எந்த கருத்தடை மாத்திரைகளும் பயன் தராது எனவும், அது பின்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மட்டுமின்றி மருத்துவர்களே மரியத்திடம் மேலும் பிள்ளை பெற்றுக் கொள்ள வலியுறுத்தியுள்ளனர்.

(Image: REUTERS)
(Image: REUTERS)
(Image: REUTERS)
(Image: REUTERS)

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்