இராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு: 15 பேர் பலியானதால் பரபரப்பு!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இராணுவத்திற்கும் ஆயுதமேந்திய பொதுமக்களுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 15 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு மெக்ஸிகோவில் செவ்வாய்க்கிழமையன்று இராணுவத்திற்கும் ஆயுதமேந்திய பொதுமக்களுக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.

உள்ளூர் நேரப்படி மாலை 5.15 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 14 பொதுமக்கள் மற்றும் ஒரு சிப்பாய் இறந்ததாக குரேரோ மாநில பொது பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ராபர்டோ அல்வாரெஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவமானது நாட்டை உலுக்கிய இரண்டாவது வெகுஜன கொலை சம்பவம் என கூறப்படுகிறது.

முன்னதாக ங்கள்கிழமை காலை அண்டை மாநிலமான மைக்கோவாகனில், தி கார்டெல் துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பொலிஸார் பலியாகினர். மேலும், 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர், மெக்ஸிகோவின் நீண்டகால வன்முறைக்கு கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்களே காரணம் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்