அனுமதி மறுத்த விமான நிலைய அதிகாரிகள்... இளம்பெண் செய்த வினோத செயல்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அதிக ஆடைகளுடன் இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெல் ரோட்ரிக்ஸ் என்கிற இளம்பெண் கடந்த சில தினங்களுக்கு முன் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அவர் கொண்டு வந்த சூட்கேஸ் 9கிகி எடையில் இருந்ததால் விமான அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். உடனே ரோட்ரிக்ஸ் 2கிகி எடை கொண்ட அவரது ஆடைகளை அடுக்கடுக்காக மேலே எடுத்து அணிந்துள்ளார்.

இறுதியாக சூட்கேஸ் எடையை 6.5 கிலோவாக குறைத்த பின்னர் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை புகைப்படமாக எடுத்து அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் 31,000 லைக்குகளையும், 1,000 கருத்துக்களையும் பெற்றுள்ளது. மேலும் 19,000க்கும் அதிகமானோரால் பகிரப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்