ஐயர்லாந்தையே கலங்க வைத்த வீடற்ற 5 வயது சிறுவனின் புகைப்படம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஐயர்லாந்தில் வீடற்ற 5 வயது சிறுவனின் புகைப்படம் அந்நாட்டு மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

The Homeless Street Cafe என்ற தன்னார்வலர் குழு தனது பக்கத்தில் குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. The Homeless Street Cafe ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை இரவு வீடற்றவர்களுக்கு உணவு, கழிப்பறைகள், உடைகள் வழங்கி வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் ஐயர்லாந்து தலைநகர் டப்ளினில் சேவை செய்துக்கொண்டிருந்த போது அவர்கள் கண்ட காட்சியை புகைப்படமாக எடுத்து சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

அந்த புகைப்படத்தில், வீடற்ற சாம் என்ற 5 வயது சிறுவன் கடும் குளிரில் சாலையில் அமர்ந்துக்கொண்டு அட்டை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இதுகுறித்து The Homeless Street Cafe பதிவிட்டதாவது, மற்றொரு பரபரப்பான இரவுக்குப் பிறகு நாங்கள் வீடு திரும்பினோம். இன்று குழுவினரிடையே ஒரு புகைப்படம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. நான் குற்ற உணர்ச்சியுடன் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.

இது மிகவும் துயரமானது, ஆனால், இது தொடர்கிறது ஒவ்வொரு வாரமும் மிகவும் மோசமடைகிறது. 5 வயதான சாம் பசியால் அட்டையை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த புகைப்படம் மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்த பல நெட்டிசன்கள், இதற்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைந்த சரியான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்