தன்னை விட 19 வயது அதிகமான கோடீஸ்வரரை மணந்த இளம்பெண்...சில மாதங்களில் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பேங்காக்கை சேர்ந்த இளைஞர் திருமணமான சில மாதத்தில் மனைவி தலையில் பெரும் கடன் தொகையை வைத்துவிட்டு வேறு நாட்டுக்கு தப்பி சென்ற நிலையில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனானட் சிரிபியபர்ன் (49) என்ற நபருக்கும் 30 வயதான இளம் பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த 6ஆம் திகதி தனானட் மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் சொல்லாமல் ஹாங்காங்குக்கு தப்பி சென்றார்.

இது அவர் மனைவியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தான் பெரும் கோடீஸ்வரர் என மனைவி மற்றும் அவர் குடும்பத்தாரிடம் தனானட் கூறிய நிலையில் திருமணத்தை பிரம்மாண்டமாக 3.5 மில்லியன் baht செலவில் நடத்தினார்.

ஆனால் அவர் மாயமான பின்னர் தான் அதற்கான எந்த பணத்தையும் அவர் செலுத்தவில்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து அந்த கடனை அவர் மனைவி மற்றும் குடும்பத்தார் கொடுக்க வேண்டும் என கோரப்பட்டது.

இது குறித்து அவர்கள் புகார் அளித்த நிலையில் பேங்காக்கின் Don Mueang விமான நிலையத்தில் நேற்றிரவு தனானட் கைது செய்யப்பட்டார்.

ஹாங்கங்கிலிருந்து ஊருக்கு வந்த நிலையிலேயே அவர் பிடிப்பட்டார்.

இது குறித்து தனானட் மனைவியின் பெற்றோர் கூறுகையில், என் மகள், தனானட் பெரிய கோடீஸ்வரர் என எங்களிடம் கூறினார், அவரை பற்றி பெரிதாக ஒன்றும் எங்களுக்கு தெரியாது என கூறியுள்ளனர்.

இதையடுத்து பொலிசார் தனானட்டிம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்