எச்சரித்த பிரான்ஸ்.. போராடிய அதிகாரிகள்: மீறியும் ஐரோப்பா நாடுகளுக்கு எதிராக அதிரடி முடிவெடுத்த அமெரிக்கா

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஐரோப்பா நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பிராந்திய தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிராந்தியத்தில் விற்பனையாகும் 7.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஐரோப்பிய பொருட்களின் விலையை அமெரிக்கா அதிரடியாக குறைத்துள்ளது.

ஏர்பஸ், பிரஞ்சு ஒயின் மற்றும் ஸ்காட்டிஷ் விஸ்கிகள் உட்பட பல உயர்நிலை பொருட்களை குறிவைத்து அமெரிக்கா இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. வாஷிங்டனில் இன்று முதல் இந்த கட்டணங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடைசி நிமிடம் வரை ஐரோப்பிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்த போதிலும், நடைமுறைப்படுத்தினால் இதற்கு பதிலடி கொடுப்போம் என பிரான்ஸ் பொருளாதார அமைச்சர் Bruno Le Maire's எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும் அமெரிக்கா இந்த விலை குறைப்ப விதித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு அவர்கள் பதிலடி கொடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்