அமெரிக்காவின் மிரட்டல் கடிதத்தை குப்பையில் வீசி எறிந்த துருக்கி ஜனாதிபதி... நடக்கப்போவது என்ன?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சிரிய விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அனுப்பிய கடித்ததை துருக்கி ஜனாதிபதி குப்பை தொட்டியியில் வீசியதாக தகவல் வெளியாகியுள்ளதால், அது சமூகவலைத்தளங்களில் பரபவலாக பேசப்படுகிறது.

சிரியாவின் வடக்கு பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக குர்து படைகளுடன் இணைந்து, அமெரிக்கா செயல்பட்டு வந்தது.

பயங்கரவாதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், சமீபத்தில் தனது இராணுவ படைகளை அமெரிக்க திரும்ப பெற்றது.

அது முதல் பழிவாங்கும் நடவடிக்கையாக வடக்கு சிரியா பகுதிகளில் வாழும் குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் இதை கண்டித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அவசியம் ஏற்பட்டால் மீண்டும் குர்துகளுக்காக அமெரிக்கா தன் ராணுவத்தை அனுப்பி வைக்கும், குர்துக்களின் மீதான தாக்குதலை துருக்கி இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் அப்படி தாக்குதல் தொடர்ந்தால் துர்கியின் அழிவை யாராலும் தடுக்க முடியாது என்று எச்சரிக்கையோடு மிரட்டினார்.

அதைத் தொடர்ந்து துருக்கி ஜனாதிபதி ஏர்டகனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில் துருக்கி இனி முட்டாள்தனமாக செயல்படாமல் ஒரு நல்ல உடன்படிக்கைக்கு முன்வர வேண்டும். துருக்கியில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருக்க வேண்டாம்.

துருக்கியின் பொருளாதாரம் அழிவதற்கு தானும் காரணமாக இருக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

குறித்த கடிதம் வெள்ளை மாளிகையில் இருந்து துருக்கி ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட நிலையில், அந்த கடித்ததை பெற்ற அவர் தன் அலுவலக குப்பைத் தொட்டியில் வீசி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கான தகவலை அதிபர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதனால் இது அமெரிக்காவையே இழிவு படுத்தும் வகையில் இருப்பதாக கூறி அங்கிருக்கும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால், டிரம்ப் என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...