வேகமாக வந்த ரயில்.. திடீரென தண்டவாளத்தில் தள்ளிவிட்ட நபர்: மயிரிழையில் உயிர் தப்பிய பெண்ணின் திக் திக் காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்

அர்ஜென்டினாவில் தண்டவாளத்தில் எதிர்பாராத விதமாக விழுந்து மயங்கிய பெண்ணை அங்கிருந்த பொதுமக்கள் போராடி காப்பாற்றியுள்ளனர்.

தலைநகர் Buenos Aires ரயில் நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த ரயில் நிலையத்தில் பொறுத்தப்பட்டிருந்த கமெராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், ரயில் வேகமாக நிலையத்திற்குள் வரும் போது, நடைமேடையில் இருந்த நபர் ஒருவர் மயங்கி பெண் மீது மோத, அப்பெண் தண்டவாளத்தில் பயங்கரமாக விழுந்து மயங்கியுள்ளார்.

இதைக்கண்ட அங்கிருந்த மக்கள் எப்படி அவரை காப்பாற்றுவது என தெரியாமல் பதறியடித்துள்ளனர். பின்னர், அனைவரும் ரயில் முன் கையை நீட்டி நிறுத்துமாறு கூச்சலிட, பெண்ணுக்கு அருகே வந்த ரயில் நிறுத்தப்பட்டது.

பின்னர், மூன்று பேர் தண்டவாளத்தில் இறங்கி அப்பெண்ணை மீட்டுள்ளனர். தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு விரைந்த அவசர உதவி குழுவும், பொலிஸ் அதிகாரிகளும் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்