41 பேரை பலி கொண்ட பயணிகள் விமான விபத்து... ஹீரோவாக மாறிய பெண் விமான ஊழியர்!

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று விபத்தில் சிக்கி நெருப்பு கோளமாக மாறிய நிலையில், அதில் இருந்த பயணிகளை காப்பாற்றி ஹீரோவான பெண் ஊழியரை பற்றி பயணிகள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து மர்மேந்ஸ்க் நகருக்கு புறப்பட்டு சென்ற SU1492 என்ற பயணிகள் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டது.

இதையடுத்து குறித்த விமானமானது தரையிறங்கிய போது, விமானம் தீப்பிடித்து நெருப்பு கோளமாக மாறியதால் விமானத்தின் ஒருபகுதி கரும்புகையை கக்கியபடியே இருந்தது.

மொத்தம் 78 பயணிகள் அந்த விமானத்தில் இருந்ததாகவும், இதில் 41 பேர் பரிதாபமாக இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விமானத்தில் பெண் விமான ஊழியராக இருந்த Tatyana Kasatkina என்ற 34 வயது பெண் விமானத்தின் உள்ளே இருந்த பயணிகளை முதலில் வெளியேற்றி, பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார்.

இது குறித்து அவர் கூறுகையில், விமானம் நின்றவுடனே அனைவரையும் வெளியேற்றினேன், பயணிகள் அனைவரும் தீ...தீ என்று கத்தினர், ஆனால் அப்போது விமானத்தின் உள்ளே தீ பரவாததால், அவர்களை வெளியேற்ற வேண்டும் என்பதால், அவசர உதவியின் கதவை உதைத்து திறந்து பயணிகளை வெளியே அனுப்பி கொண்டிருந்தேன்.

அப்போது விமானத்தில் இருந்த பெண் ஒருவர் போனில் நாங்கள் தீயில் சிக்கிவிட்டோம் என்று புலம்பினார். அப்போது தீ புகையால் இருட்டாக இருக்க, பிளாஸ் லைட்டை ஆன் செய்து அவர்களை வெளியில் துரத்தினேன்.

Tatyana Kasatkina(Picture: East2west News)

அதிலும் சில உயிரைவிட தாங்கள் கொண்டு வந்த உடைமைகள் பெரிது என்பது போல் நடந்து கொண்டனர். அதை எடுக்க முயற்சியும் செய்தனர் என்று கூறினார்.

இந்த விபத்தில் இருந்து தப்பிய Dmitry Khlebnikov கூறுகையில், நான் கடவுளுக்கும், அந்த பெண் ஊழியருக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும், அவர் அந்த விமானத்தில் நாங்கள் வெளியேறும் வரை உதவினார். அந்த பயங்கரமான வெப்பத்திலும் அவர் பயணிகளை வெளியேற்றினார் என்று கூறினார்.

மற்றொரு பயணியான Dmitry Kharinin கூறுகையில், முதலில் நாங்கள் விமான ஊழியருக்கு நன்றி சொல்ல வேண்டும், அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று கூறி முடித்தார்.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்