வெளிநாடுகளிலிருந்து விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்ட அதிகாரிகள்... சிக்கியது என்ன தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்த விமானங்களில் இருக்கும் பயணிகள் சிலரிடம் நடத்திய சோதனையில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகை மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கொழும்பு, சிங்கப்பூர் மற்றும் துபாய் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததால், சென்னை விமானநிலையத்தில் அதிகாரிகள் விமானநிலையத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சோதனை நடத்தினர்.

குறிப்பாக கொழும்புவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த 4 பேர், சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த 3 பேர் என 7 பேரை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அதில் ஒருவர் மீது பொலிசாருக்கு சந்தேகம் வலுத்ததால், அவரிடம் தனியாக சோதனை மேற்கொண்ட போது, சுமார் 2 கிலோ எடையிலான 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதோடு துபாயிலிருந்து இருவேறு விமானங்களில் வந்த தமிழகத்தின் ராமநாதபுரத்தை சேர்ந்த பயணிகள் இருவரை சோதனையிட்டபோது, அவர்களிடம் 678 கிராம் எடையிலான 27 லட்சம் ரூபாய் மதிப்பு தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவர்களிடம் இருந்து 5 பழைய லேப்டாப்கள் மற்றும் 5,600 சிகரெட் குச்சிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்து வந்த அப்தீன் என்பவர் செருப்பில் மறைத்து கடத்திய 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டொலர் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்