பிரித்தானியா இளவரசர் வில்லியம்-கேட் சென்ற விமானம் குலுங்கியது.... வெளியான திகில் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பிரித்தானியா இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் பாகிஸ்தான் சென்றுள்ள நிலையில், அவர்களின் விமானம் கடுமையான மழை, இடி காரணமாக குலுங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானிற்கு அரசு முறைப் பயணமாக 5 நாட்கள் சென்றுள்ள பிரித்தானியா இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் கேட், அங்கிருக்கும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அவர்கள் லாகூரிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு செல்வதற்காக விமானத்தில் சென்றுள்ளனர். அப்போது கடுமையான மழை மற்றும் இடி, மின்னலின் காரணமாக குறித்த விமானம் குலுங்கியுள்ளது.

இதை விமானத்தில் இருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுக்க தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விமான சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மோசமான வானிலையில் பறந்ததால், விமானம் மீண்டும் லாகூர் விமானநிலையத்தில் பாதுகாப்பிற்காக தரையிரக்கப்பட்டதாகவும், அப்போது வில்லியம் விமானத்தில் இருந்த அனைவருக்கும் ஒன்றும் ஆகவில்லையே என்று கேள்வி கேட்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன் பின் இஸ்லாமாபாத் சென்ற வில்லியம்ஸ் மற்றும் கேட் அங்கிருந்த மசூதி, புற்றுநோய் மருத்துவமனை மற்றும் கிரிக்கெட் அகடாமி ஆகிவைக்கு சென்றுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்