தடை செய்யப்பட்ட ஆயுத தாக்குதல்... எரிந்து போன உடலுடன் உதவி கேட்டு அலறிய சிறுவன்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தடை செய்யப்பட்ட ஆயுதங்களை கொண்டு துருக்கி நடத்திய தாக்குதலால், பற்றி எரிந்த உடலுடன் சிறுவர்கள் சிகிச்சை பெற்று வரும் திகிலூட்டும் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சிரியாவில் குர்து போராளிகளுக்கு எதிராக துருக்கி நடத்தி வந்த தாக்குதலில் தடை செய்யப்பட்ட, நாபாம் மற்றும் வெள்ளை பாஸ்பரஸ் போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஒரு கூற்று இருந்து வருகிறது.

இந்த நிலையில் எல்லை நகரமான ராஸ் அல்-அய்னுக்கு அருகிலுள்ள தால் தம்ரில் உள்ள ஒரு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட துன்பகரமான புகைப்படங்கள் மற்றும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

திங்களன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தில், ஒரு சிறுவன் தனது முழு உடலிலும் ஆழமான தீக்காயங்களுடன் அலறியபடியே தன்னுடைய தந்தையிடம் காப்பாற்றுமாறு கெஞ்சியுள்ளான்.

அந்த சிறுவன் சிகிச்சை பெறுவதற்கு முன்பு 12 மணி நேரம் வேதனையில் கழித்ததாக கருதப்படுகிறது. பிரித்தானிய இரசாயன ஆயுத நிபுணரான ஹமிஷ் டி-பிரெட்டன் கார்டன், தீக்காயங்கள் வெள்ளை பாஸ்பரஸுடன் ஒத்துப்போகின்றன எனவும், இது தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்