சிரியாவில் தங்களது விமான தளத்தையே தகர்த்த அமெரிக்கா! வெளியான தகவல்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

சிரியாவில் இருந்து வீரர்களை விலக்கிக் கொள்வதற்கு முன், தங்கள் சொந்த விமான தளத்தை அமெரிக்கா குண்டு வைத்து தகர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியா நாட்டில் குர்து படைகளுக்கும், துருக்கி ராணுவத்திற்கு இடையே சண்டை நடந்து வருகிறது. குர்து படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தங்களது படையை அனுப்பியது.

ஆனால், துருக்கியுடனான மோதலில் தலையிட்டுக் கொள்ள விரும்பவில்லை என்று கூறிய அமெரிக்கா, தங்கள் வீரர்களை விலக்கிக் கொண்டது.

வடகிழக்கு சிரியாவின் அல்-ஹசாக் மாகாணத்தில் உள்ள டல் டாமர் நகர் அருகே, அமெரிக்காவின் படைத்தளம் அமைந்திருந்தது. அமெரிக்கப் படையினர் வெளியேறும் முன் இந்த படைத்தளத்தை தகர்த்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேபோல், அல்-ஹசாக் மாகாணத்தில் அஸ்-ஷபேயா அருகே அமைந்துள்ள மற்றொரு விமான தளத்தையும், கைவிட்டு வெளியேற அமெரிக்க வீரர்கள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்