இறந்ததாக நினைத்து மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை... நாயின் மோப்ப சக்தியால் நடந்த அதிசயம்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவில் இறந்ததாக நினைத்து புதைக்கப்பட்ட குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

சீனாவை சேர்ந்த ஜியாவோ சிங்லு மற்றும் ஜாவ் ஷாங்க்டாங் ஆகியோர் அக்டோபர் 21ம் திகதியன்று லாயுவுக்கு அருகிலுள்ள தொலைதூர மலைகளில் காளான்களை தேடும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர்.

அப்போது ஒரு நாய் நீண்ட நேரமாக தரையில் காலால் பறித்தவாறு குறைந்துகொண்டே இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த இருவரும், அந்த இடத்தில் குழி தோண்ட ஆரம்பித்துள்ளனர்.

அப்போது கட்டப்பட்டிருந்த ஒரு அட்டைப்பெட்டி அவர்களுடைய கைகளுக்கு கிடைத்தது. அதனை திறந்து பார்த்த போது உள்ளே ஒரு ஆண் குழந்தை உயிரோடு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடனடியாக அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று போது, இரத்த சோகை மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், குழந்தை அக்டோபர் 20ம் திகதி அன்று பிறந்ததாகவும், கடுமையான நுரையீரல் தொற்றுடன் போராடி மறுநாளே இறந்துவிட்டதாக கருதி அதன் பெற்றோர் புதைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்