இந்தோனேசியாவில் இருவருக்கு பொது இடத்தில் பிரம்படி: அவர்கள் செய்த குற்றம்?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஷரியா சட்டத்தை மீறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் இந்தோனேசியாவில் இருவருக்கு பொது இடத்தில் பிரம்படி வழங்கப்பட்டது. அவர்கள் செய்த குற்றம், சூதாடியது.

இந்தோனேசியாவின் Banda Aceh என்ற இடத்தில் சூதாடிய அந்த இருவருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுக்கப்பட்டது.

தண்டனை பெற்ற இருவருக்கும் சுமார் 50 வயது இருக்கலாம். ஷரியா சட்டத்தின்படி, சூதாட்டம், ஓரினச்சேர்க்கை, மதுபானம் விற்றல் மற்றும் அருந்துதல், திருமணத்துக்கு வெளியே பாலுறவு ஆகிய குற்றங்களுக்கு பிரம்படி தண்டனையாக வழங்கப்படுகிறது.

அதன்படி, சூதாடிய இருவருக்கு பிரம்படி வழங்கப்படும் காட்சிகள் இன்று வெளியாகியுள்ளன.

இத்தகைய தண்டனைகள் பொது இடங்களில் வழங்கப்படுவது மற்றும் அவற்றைக் குறித்த புகைப்படங்கள் வெளியாவது குற்றம் செய்வோரை யோசிக்க வைக்கும் என கருதப்படுகிறது.

மனித உரிமை அமைப்புகள் பல இந்த பிரம்படி தண்டனைக்கு எதிராக குரல்கொடுத்தும் இந்தோனேசியாவின் குறிப்பிட்ட பாரம்பரியம் மிக்க சில இடங்கள் ஷரியா சட்டத்தை கடுமையாக பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்