பிஞ்சு குழந்தையிடம் பாசத்தை வெளிப்படுத்த போராடும் காது கேளாத தந்தை: கண்கலங்க வைக்கும் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

காது கேளாத குறைபாடு உள்ள ஒரு தந்தை தன்னுடைய குழந்தையிடம் பாசத்தை வெளிப்படுத்த போராடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஓய்வுபெற்ற அமெரிக்க கூடைப்பந்தாட்ட நிபுணர் ரெக்ஸ் சாப்மேன் பகிர்ந்த சமீபத்திய வீடியோ, காது கேளாத ஒருவர் தனது பிறந்த மகளுடன் சைகை மொழியில் தொடர்பு கொள்ள முயற்சிப்பதைக் காட்டுகிறது.

5.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருக்கும் இந்த வீடியோ காட்சியானது, தந்தைக்கும் அவரது பிறந்த மகளுக்கும் இடையிலான உணர்ச்சிபூர்வமான காட்சிகளை காட்டுகிறது.

புதிதாகப் பிறந்த குழந்தையின் கண்கள் அவளுடைய தந்தையின் மீது எவ்வாறு கவனம் செலுத்துகின்றன என்பதை மக்களால் கவனிக்க முடியவில்லை.

ஆனால் 41 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், தந்தை தனது குழந்தையை கைகளில் பிடித்துக்கொண்டு அவளுடன் சைகை மொழியில் உரையாடுவதைக் காட்டுகிறது. இது பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு காட்சி அறிகுறிகளைப் பயன்படுத்தி தொடர்புகொள்வதற்கான உலகளாவிய முறையாகும்.

இந்த வீடியோ ட்விட்டர் பயனர்களால் பரவலாக பகிரப்பட்டது. ஆனால் அது எப்போது, எங்கு படமாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ரெக்ஸ் சாப்மேன் அதை ட்விட்டரில் பகிர்ந்த பின்னர், இந்த வீடியோ வைரலாகியது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்