குடியிருப்பு பகுதியில் விழுந்து தீ பிடித்து எரிந்த விமானம்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிரேசில் நாட்டில் விமானம் திடீரென குடியிருப்பு பகுதியில் விழுந்து தீ பிடித்து எரிந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெலோ ஹொரிசொண்டேவின் வடமேற்கில் உள்ள கார்லோஸ் ப்ரேட்ஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, சிறிது நேரத்திலேயே கைகாராவில் விபத்துக்குள்ளானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மினெர்வா மற்றும் பெல்மிரோ பிராகா வீதிகளின் சந்திப்பில் விமானம், வாகனங்களில் விழுந்து நொறுங்கியதாக உள்ளூர் தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடற்படை காவல்துறை மற்றும் நகராட்சி காவல்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் மூன்று பேர் காயமடைந்திருப்பதாக மீட்பு படை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்