அமெரிக்கா பதற்றங்களை அதிகரிக்க இப்படி செய்யலாம்... ரஷ்யா வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ராணுவ பதற்றங்களை அதிகரிக்க பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் அமெரிகா ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ளலாம் என்று ரஷ்யா பாதுக்காப்புதுறை மந்திரி கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கிடையே கடந்த 1987-ஆம் ஆண்டு அணு ஆயுத பயன்பாட்டை கட்டுப்படுத்தும்விதமாக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

அதாவது, நடுத்தர தொலைவு அணு ஆயுதங்கள், நிலத்தில் இருந்து ஏவப்படும் சிறிய மற்றும் நடுத்தர தூர அணு ஆயுத ஏவுகணைகளை இரு நாடுகளும் பயன்படுத்த தடை என்பதே ஆகும்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் திகதி அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை விட்டு வெளியேறியதால் ஒப்பந்தம் ரத்தானதாக ரஷ்யா அறிவித்தது.

இதையடுத்து, இரு நாடுகளிடையே ராணுவ பதற்றங்களை உருவாக்க அமெரிக்கா, குறுகிய மற்றும் நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளலாம் என ரஷ்யா பாதுகாப்புத்துறை மந்திரி செர்கை சோய்கு சீனாவில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான 9-வது சியாங்சன் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.

அதில், பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள இடங்கள் மற்றும் ஐரோப்பிய பிராந்திய பகுதிகளில் ராணுவ பதற்றங்களை உருவாக்க அமெரிக்கா ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

அவ்வாறு நடந்தால் அது ஆயுதப் போட்டிக்கு வழி வகுக்கும், மோதல்கள் அதிகமாக நடைபெறவும் வாய்ப்புகள் அதிகம்.

இதனால் ஆர்வமுள்ள அனைத்து தரப்பினருடனும் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளை வளர்த்துவரும் நாங்கள் பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்