வெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கத்தாரில் இந்திய குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மருத்துவ அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஹரிஸ் மற்றும் ஷமீனா என்கிற தம்பதியினர், கத்தாரில் தங்களுடைய குழந்தைகள் மூன்றரை வயது ரெஹான் ஹரிஸ் மற்றும் அவரது சகோதரி 7 மாத ரிடா ஹாரிஸ் ஆகியோருடன் வசித்து வந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று தம்பதியினரின் இரண்டு குழந்தைகளும் உடல்நிலை சரியில்லாமல் தொடர்ந்து வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனையடுத்து விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தொற்றுநோயியல் விசாரணைக் குழு மற்றும் சுகாதார நச்சுயியல் குழு விசாரணையை ஆரம்பித்தது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் கட்டிடத்தை குழு பார்வையிட்டதோடு, மீதமுள்ள உணவுப் பொருட்களை சேகரித்து ஆய்வு செய்தது.

இதன் ஆரம்ப முடிவுகளின் அடிப்படையில், குழந்தைகள் ஒரு இரசாயன அல்லது பூச்சிக்கொல்லியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, மரணத்திற்கான காரணம் உணவு விஷம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் பொது சுகாதார அமைச்சகம் அதை ஒரு காரணம் என்று தீர்ப்பளித்து, சில நச்சுப் பொருள்களை உள்ளிழுப்பது மரணங்களுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று விளக்கினர்.

பூச்சிகளை அகற்ற அண்டை குடியிருப்பில் சில பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டதாகவும், குழந்தைகள் தங்கள் குளிரூட்டியின் வழியாக நுழைந்தவுடன் அதை சுவாசித்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்