வாழ்க்கையின் பெரும்பகுதியை 9 விரல்கள் கொண்ட காலுடன் வாழ்ந்து வந்த சீன இளைஞர் தற்போது அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
சீனாவின் Foshan பகுதியை சேர்ந்தவர் 21 வயதாகும் அஜூன். பிறக்கும்போதே அவரது ஒரு காலில் 9 விரல்கள் இருந்துள்ளது.
இது நல்ல சகுனம் என நம்பிய அவரது பெற்றோர், அறுவை சிகிச்சைக்கு முன்வரவில்லை என்பது மட்டுமல்ல அதனால் ஏற்படும் சிக்கலை கண்டுகொள்ளவும் இல்லை.
சிறுவன் அஜூன் தமது காலில் இருக்கும் கூடுதல் விரல்களால் பாடசாலை முதல் தொடர்ந்து அவதிப்பட்டு வந்துள்ளான்.
இந்த நிலையில் மருத்துவர் யு ஜியாங் தலைமையிலான குழு ஒன்று 9 மணி நேர முயற்சிக்கு பின்னர் இளைஞரின் காலில் கூடுதலாக இருந்த விரல்களை அகற்றியுள்ளனர்.
தற்போது தாம் நிம்மதியாக உணர்வதாக அஜூன் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி அந்த அறுவை சிக்கிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இன்னும் சில வாரங்களில் அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.