இறந்த ஐஎஸ் பயங்கரவாத தலைவன் அல் பாக்தாதியின் சகோதரி கைது

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரான அல் பாக்தாதியின் சகோதரி நேற்று கைது செய்யப்பட்டதாக துருக்கி தகவல் வெளியிட்டுள்ளது.

வடமேற்கு சிரியாவில் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரான அல் பாக்தாதியின் மூத்த சகோதரியை திங்கட்கிழமை கைது செய்ததாக துருக்கிய அதிகாரிகள் இன்று தகவல் வெளியிட்டுள்ளனர்.

ரஸ்மியா அவத் என அழைக்கப்படும் 65 வயதான அந்த பெண், அலெப்போ மாகாணத்தின் ஆசாஸ் நகருக்கு அருகே திங்கட்கிழமை மாலை நடந்த வாகன சோதனையில் குடும்பத்துடன் பிடிபட்டுள்ளார்.

அவருக்கு தீவிரவாத குழுவுடன் தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ரஸ்மியா தனது கணவர், மருமகள் மற்றும் ஐந்து குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அதில் பெரியவர்களிடம் மட்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்