இந்திய அணுமின் நிலைய கணினி மீது சைபர் தாக்குதல் தொடுத்த வடகொரியா: வெளியான பகீர் ஆதாரம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இந்தியாவின் தமிழகத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முக்கிய ஆவணங்களை திருடியது வடகொரியாதான் என்பதற்கான ஆதாரத்தை தென்கொரியா வெளியிட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள கணினிகள் இணையவழி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதனால் உற்பத்தி திடீரென்று பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையவழி தாக்குதல் வடகொரிய ஹேக்கர்கள் குழுவால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள ரகசிய தகவல்களை திருடுவதற்காக டிடிராக் ரேட் (D Track RAT) தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வகை தாக்குதலானது பெரும்பாலான இடங்களில் பண மோசடி செய்யவே பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் இந்த தகவலை கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் தரப்பு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கணினிகளில் இருந்து ஹேக்கிங் மூலம் தகவல்களை திருடியது வடகொரியாதான் என தென் கொரியா ஆதாரத்துடன் கூறியுள்ளது.

இதுகுறித்து issue makers lab என்ற சைபர் கிரைம் பாதுகாப்பு அமைப்பு தொடர் ட்வீட்களை வெளியிட்டுள்ளது. இந்த திருட்டுக்கு பின்னால் தோரியம் குறித்த அணு மின் தகவல்களே உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தோரியம் அணு ஆயுததொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி வகிக்கிறது. கடந்த ஆண்டு முதல் இந்த தோரியத்தை மூலப்பொருளாக கொண்டு மின் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை திருட வடகொரியா முயற்சித்து வந்துள்ளது.

மேலும், கூடங்குளம் அணு மின் நிலையம் மீது சைபர் தாக்குதல் நடத்திய நபர் வடகொரியாவில் தயாரிக்கப்பட்ட கணினியை பயன்படுத்தியுள்ளார். இந்த கணினிகள் வடகொரியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஹேக்கரின் ஐபி முகவரி வடகொரியா தலைநகர் பியாங்யாங்கிலிருந்து வருகிறது. ஹேக்கர் குரூப் பி என்ற வைரஸை வடகொரியா பயன்படுத்துகிறது.

ஹேக் செய்யப்பட்ட கணினியிலிருந்து கோப்புகளை வைரஸ் கம்ப்ரஸ் செய்ய dkwero38oerA^t@# என்ற 16 இலக்க பாஸ்வேர்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பாஸ்வேர்டை கொண்டு கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. டி டிராக் வைரஸின் குறியீடை வடகொரியா ஹேக்கர்கள் பயன்படுத்தியது சரிபார்க்கப்பட்டது.

இதே வைரஸ்தான் கடந்த 2016-ஆம் ஆண்டு தென் கொரியா ராணுவ நெட்வொர்க் தொடர்பான தகவல்களை திருட பயன்படுத்தப்பட்டது என அடுக்கடுக்கான ஆதாரங்களை தென் கொரியா முன்வைத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்