கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பனிக்கட்டி முட்டைகள்: ஒரு அபூர்வ நிகழ்வு!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பின்லாந்திலுள்ள கடற்கரை ஒன்றில் ஆயிரக்கணக்கான பனிக்கட்டி முட்டைகள் உருவாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

இரவு நேரத்தில் யாரோ ஆயிரக்கணக்கான ராட்சத முட்டைகளை கொண்டு கடற்கரையில் கொட்டிக் குவித்ததைப்போல் இந்த காட்சி காணப்படுகிரது.

கடற்கரைக்கு வந்த அந்த பகுதியைச் சேர்ந்த Risto Mattila என்பவர், உடனடியாக சென்று தனது கமெராவை எடுத்துக்கொண்டு வந்து, இந்த காட்சியை படம் பிடித்துள்ளார்.

இது ஒரு அபூர்வ நிகழ்வு என்று கூறும் வல்லுநர்கள், காற்றினாலும் தண்ணீரினாலும் சிறு பனிக்கட்டித் துகள்கள் மென்மேலும் உருண்டு உருண்டு, இத்தகைய பெரிய பந்துகளாக மாறுவதாக தெரிவிக்கின்றனர்.

Credit: Risto Mattila

Oulu என்ற பகுதியைச் சேர்ந்த Risto, இப்படி ஒரு காட்சியை தான் இதற்குமுன் கண்டதில்லை என்கிறார்.

சுமார் 100 அடி தூரத்திற்கு இந்த பந்துகள் பரவிக் காணப்பட்டதாகவும், சில, கால் பந்து அளவுக்கு பெரியதாக காணப்பட்டதாகவும் கூறுகிறார்.

24 ஆண்டுகளாக இந்த பகுதியில்தான் வாழ்கிறேன், ஆனால், இப்படி ஒரு காட்சியைக் கண்டதில்லை என்கிறார் அவர்.

Credit: EKATERINA CHERNYKH

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்