பசியால் வெறிப்பிடித்து மனித குழந்தைகளை வேட்டையாடி சாப்பிடும் சிம்பன்சிகள்: காடழிப்பின் விளைவுகள்

Report Print Basu in ஏனைய நாடுகள்

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான உகாண்டாவில் பசியால் வெறிப்பிடித்த சிம்பன்சி குரங்குகள், மனித குழந்தைகளை வேட்டையாடி சாப்பிடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உகாண்டாவின் கிராமப்புற பகுதியில் பயத்துடன் வாழும் குடும்பங்கள், சின்பன்சி குரங்குகள் தங்களின் குழந்தைகளை கடத்தி கொலை செய்வதால் தங்கள் வாழ்க்கை எவ்வாறு அச்சுறுத்தப்படுகிறது என்பதை கூறியுள்ளனர்.

காடுளில் சின்பன்சிகள் வாழும் இடங்கள் அழிக்கப்படுவதால் அவை குழந்தைகளை கொலை செய்தவதாக அதிர்ச்சியளிக்கும் அறிக்கை வெளியாகியுள்ளது. பசியால் வெறி பிடிக்கும் சின்பன்சிகள் கிராமப்பகுதிகளை முற்றுகையிட்டுள்ளன.

சிம்பன்சியால் கொல்லப்பட்ட குழந்தையின் தாய் Ntegeka Semata கூறியதாவது, சம்பவத்தின் போது நான் குழி தோண்டிக்கொண்டிருந்த போது, ஒரு பெரிய ஆண் சிம்பன்சி, என்னிடமிருந்து 2 வயது மகன் Mujuni-ஐ பிடுங்கிச்சென்றது.

பின்னர், அது Mujuni-ன் கையை உடைத்து, தலையில் தாக்கி வயிற்றை கிழித்து சிறுநிரகங்களை எடுத்தது. துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை Mujuni உயிரிழந்துள்ளார்.

இதே பாணியில் இதுவரை 3 குழந்தைகள் சிம்பன்சிகளால் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

சிம்பன்சி தாக்குதலுக்கு தூண்டிய காடழிப்பு குறித்து தங்களால் எதுவும் செய்யமுடியாது உகாண்டா வனவிலங்கு ஆணையம் என்று கூறியுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, இந்த பகுதிகளை அழிப்பதைத் தடுப்பது எங்களுக்கு கடினம் சாத்தியமற்றது. எங்களால் கோரிக்கையை முன்வைக்கவும், கல்வி கற்பிக்க மட்டுமே முடியும். மக்கள் அதை ஏற்றுக்கொள்வர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என உகாண்டா வனவிலங்கு ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் Sam Mwandha கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்