வெட்க கேடானது! அயோத்தி தீர்ப்பு குறித்து பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு கருத்து

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை பாகிஸ்தான் அமைச்சர் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

அயோத்தி வழக்கின் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியான நிலையில் சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சர்ச்சைக்குரிய புனிதத் தலம் இந்துக்கள் கோயில் கட்டுவதற்காகத் தரப்படவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதே போல சுன்னி வஃக்பு வாரியத்துக்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு அல்லது மாநில அரசு அளிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து பாகிஸ்தான் அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபவட் ஹுசைன் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் வெட்கக் கேடானது, அருவருப்பானது, சட்டவிரோதமானது, அறக்கேடானது என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்