கே. எப். சியில் காதலை சொன்ன காதலர்: முன் பின் தெரியாதவர்களிடமிருந்து குவியும் ஆதரவு!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

கே. எப். சியில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, ஆண் ஒருவர் பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்த, அதை ஒருவர் வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவேற்ற, அது வைரலாக, அவர்களது திருமணத்துக்கான எல்லா உதவிகளையும் செய்ய, முன் பின் தெரியாத பலர் முன் வந்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள கே.எஃப்.சி உணவகம் ஒன்றில் தனது காதலியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர், திடீரென சாப்பிடுவதை இடையில் நிறுத்திவிட்டு, தன் காதலி முன் மண்டியிட்டு மோதிரம் ஒன்றை எடுத்து நீட்டி, தனது காதலை வெளிப்படுத்தினார்.

இதை அவ்வழியே சென்ற Kateka Malobola என்பவர் கண்டு, வீடியோ எடுத்து அதை ட்விட்டரில் #KFCProposal எனும் ஹேஷ்டேக்குடன் பதிவேற்ற, உடனடியாக அது வைரலானது.

அந்த ஜோடியைக் கண்டுபிடித்துத் தருமாறு கே.எஃப்.சி வெளியிட்ட ட்வீட், 19,000 முறைக்கும் மேல் பகிரப்பட்டது.

பின்னர் அது Bhut' Hector என்பவர், Nonhlanhlaஎனும் பெண்ணிடம் காதலைத் தெரிவித்த நிகழ்வு என்று தெரிய வந்தது.

தற்போது, ஜோடி மிகவும் பிரபலமாகிவிட, ஜோடியின் திருமணத்துக்கு குளிர்பானம், நிகழ்விடம், தேனிலவு செல்வதற்கான முன்பதிவு போன்றவற்றை இலவசமாக செய்து கொடுத்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க முன் பின் தெரியாத பலர் முன்வந்துள்ளனர்.

பலர் திருமணச் செலவுக்கு பணம் கொடுப்பதாகக் கூறியுள்ளனர்.

DRUM என்ற பத்திரிகை, அவர்களுடைய அழகான காதல் கதையை இரண்டு பக்க செய்தியாக வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Zakes Bantwini எனும் பிரபலமான பாடகர், அவர்கள் திருமணத்தில் இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்த முன்வந்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் ஆடி கார் நிறுவனம், அவர்கள் தேனிலவுக்கு போகும் இடம் தூரமாக உள்ளதே, யாராவது அவர்களை அங்கு கொண்டு விட வேண்டும் அல்லவா?, நாங்கள் அதைச் செய்கிறோம் என்று கூறியுள்ளது.

முன் பின் தெரியாதவர்கள் தனது திருமணத்துக்கு உதவ முன்வந்துள்ளதைக் கண்டு நெகிழ்ந்துபோன Hector, அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்