மரண தண்டனைக்கு பயந்து 4 வாரங்களாக விமான நிலையத்தில் தவித்த ஈரானிய முன்னாள் அழகி..!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மரண தண்டனைக்கு பயந்து 4 வாரங்களாக விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானிய முன்னாள் அழகிக்கு பிலிப்பைன்ஸ் நாடு புகலிடம் வழங்கியுள்ளது.

மணிலாவில் நடைபெற்ற 2018 மிஸ் இன்டர் கான்டினென்டல் போட்டியில் ஈரானைப் பிரதிநிதித்துவப்படுத்திய பஹரே ஜரே பஹாரி, 2014 முதல் பிலிப்பைன்ஸில் பல் மருத்துவம் பயின்றவர்.

இவர் ஈரானிய அரசை விமர்சித்தும், அந்நாட்டு பெண்களின் உரிமைகளுக்கு ஆதரவாகவும் பேசியதை அடுத்து இன்டர்போல் நிறுவனம் "ரெட் நோட்டீஸ்" வெளியிட்டது.

இதன் விளைவாக அக்டோபர் 17 அன்று பிலிப்பைன்ஸுக்குள் நுழைய முயன்ற அவர் காவலில் தடுத்து வைக்கப்பட்டார். ஈரானிய அரசுக்கு எதிராக பேசியதால் சிறைத்தண்டனை அல்லது தூக்கு தண்டனை கிடைக்கும் என்கிற அச்சத்தினாலே அவர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு தப்பி வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து நவம்பர் 6 ஆம் தேதி பிலிப்பைன்ஸ் நீதிமன்றம் அவரை அகதியாக அங்கீகரித்தது. ஆனால் அந்த ஆவணம் வெள்ளிக்கிழமை தான் வெளியிடப்பட்டது.

அதில், விசா மற்றும் பதிவு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று குடிவரவு பணியகத்தில் புகார் செய்யுமாறு அந்த பெண்ணுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்

பஹாரி பிலிப்பைன்ஸில் பணியாற்ற விரும்பினால் பயண ஆவணம் வழங்கப்பட வேண்டும் மற்றும் பணி அனுமதி தேவைகள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் அந்த ஆவணம் பரிந்துரைத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்