இளம்பெண்ணை விமானத்தை இயக்கவிட்டு வேடிக்கை பார்த்த விமானி: சிறைக்கு செல்கிறார்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பயணிகள் பலர் பயணிக்கும் விமானம் ஒன்றை, இளம்பெண்ணை இயக்கவிட்டு விட்டு, வேடிக்கை பார்த்த விமானி ஒருவர் சிறைக்கு செல்ல இருக்கிறார்.

ரஷ்யாவில் 52 பேருடன் Yakutsk என்ற இடத்திலிருந்து Batagay-Alyta என்ற இடத்திற்கு செல்லும் விமானம் ஒன்றை, ஒரு இளம்பெண் இயக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த இளம்பெண் விமானியும் அல்ல, விமானியின் சீருடையிலும் அவர் இல்லை. அத்துடன் அவருக்கு விமானம் ஓட்ட தெரிந்ததாகவும் தெரியவில்லை.

காரணம் அவர் அருகில் அமர்ந்திருக்கும் விமானி ஒருவர் அந்த பெண்ணிடம் அதை இயக்கு, இந்த பக்கம் திருப்பு என கூற அதன்படி செய்வதோடு, நான் அங்கு போனால் என்ன ஆகும் என்றும் நேவிகேட்டரைக் காட்டிக் கேட்கிறார் அந்த பெண்.

பயணிகளின் உயிர்களுடன் விளையாடுவதா என அந்த வீடியோ குறித்து கடும் சர்ச்சை ஏற்பட, தற்போது விமான நிறுவனம் அந்த விமானி மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த விமானியின் பெயர் Kirill S என்றும் அந்த இளம்பெண்ணின் பெயர் Anna (33) என்றும் தெரியவந்துள்ளது.

Anna விமானியின் சிறுவயது தோழி என பெயர் வெளியிட விரும்பாத Kirillஇன் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பயணிகளின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில், ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் பறக்கும் அந்த விமானத்தை Kirill அந்த பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதோடு 300,000 ரூபிள்கள் (3,700 பவுண்டுகள்) அபராதமும் விதிக்கப்படும்.

Kirill மீது கிரிமினல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

தனது நண்பர் தன்னால் தண்டனை அனுபவிக்கப்போவது தெரிந்து Anna தன்னையே நொந்துகொள்கிறாராம்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்