மனிதனை போலவே தோற்றமளிக்கும் மீன்: அபூர்வ வீடியோ!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சீனாவில் பெண் ஒருவர் மனித முகம் கொண்ட ஒரு மீனைக் கண்டு ஆச்சரியத்தில் உறைந்துபோயிருக்கிறார்.

நேற்று பிரபல சுற்றுலாத்தலமான Kunming நகரிலுள்ள Miao என்ற கிராமத்துக்கு சென்றிருந்த ஒரு பெண், இந்த அபூர்வ மீனைக் கண்டு அதை வீடியோ எடுத்துள்ளார். சீனாவின் சமூக ஊடகம் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

வீடியோவைப் பார்த்த ஒருவர், அந்த மீனைப் பார்க்க பயமாக இருக்கிறது என்று கூற, மற்றொருவர், அதை சாப்பிட யாருக்காவது தைரியம் இருக்கிறதா என்று கேட்டுள்ளார்.

Carp என்னும் வகை மீன்கள், மனித முகம் போன்ற முகம் கொண்டவை என்பது நீண்ட காலமாகவே கூறப்பட்டு வந்தாலும், அப்படி ஒரு மீனைப் பார்ப்பது அபூர்வமானதாகவே இருந்து வந்துள்ளது.

உண்மையாகவே அந்த மீனின் வாய், மூக்கு மற்றும் கண்களைப் பார்க்கும்போது, மனித முகம் போலவே அது காணப்படுவதை மறுக்க முடியாது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்